நாளைய தினம் (14.04.2022) பிறக்கவிருக்கும் சுபகிருது புத்தாண்டை கொண்டாட மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு மக்கள் வருகை தந்து அத்தியவசிய பொருட்களை இன்று (13.04.2022) கொள்வனவு செய்தனர்.புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரம் களைகட்டியது. அத்தோடு, வீடுகளை சுத்தம் செய்தனர். மேலும், திண்பண்டங்களை செய்வதிலும் ஆர்வம் காட்டினர்.
அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், பொகவந்தலாவை, புஸல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர் பகுதிகளில் இன்று (13.04.2022) இந்நிலைமையே காணப்பட்டது. சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது.
பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தாம் பண்டிகையை கொண்டாடுவதாக மக்கள் வெளியிடும் கருத்துகள் மூலம் அறியமுடிந்தது. வருடம் ஒருமுறைதான் பண்டிகை வருகிறது, அதனால்தான் கடன்பட்டாவது கொண்டாடுகின்றோம் என சிலர் கூறுவதை கேட்கமுடிந்தது.
(க.கிஷாந்தன்)