நுவரெலியா சிங்கள்ட்ரி மலைக்கு அருகாமையில் ஸ்விட்சர்லந்து 18 யுவதி ஒருவர் இனந்தெரியாத நபர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
07.01.2018ம் திகதி நுவரெலியா சிங்கள்ட்ரி மலைக்கு அருகாமையில் 18 வயதுடைய ஸ்விட்சர்லந்து யுவதி மு.ப. 10. மணிக்கு தனியாக ஸ்ரீ பாத மலை மற்றும் இயற்கை காட்சிகளை காண சென்றுள்ளார். அவ்வேளையில் இனந்தெரியாத நபர் ஒருவர் பலாத்காரமாக இழுத்துச் சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து யுவதி அவரின் உறவினர் ஒருவருடன் சம்பவம் நடந்த அன்று மாலை 4 மணியளவில் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
யுவதியை நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் இவர் இலங்கையில் பெரும்பான்மையான சுற்றுலா தலங்களுக்கு தனியாகவே சென்ற இவ்யுவதி நுவரெலியாவிற்கு இறுதியாக வந்துள்ளார். இவர் 04.02.2018ம் திகதி தனது தாய்நாட்டுக்கு செல்லவிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
டீ. சந்ரு.