சூயிங்கத்தை விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நாம் சிறுபிள்ளைகளாக இருந்த காலம் தொடங்கி, இன்றுவரை நாம் கேள்விப்படும் பல விஷயங்களில் ஒன்று சூயிங்கத்தை விழுங்கிவிட்டால் அது பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பது. உண்மையிலயே சூயிங்கத்தை விழுங்கிவிட்டால் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துமா?
நிச்சயம் இல்லை. இனிப்பூட்டிகள் மற்றும் ஃப்ளேவர்கள் கொண்ட சூயிங்கம் வயிற்றில் எளிதில் செறித்து விடும். ஒருவேளை நம்மை அறியாமல் சூயிங்கத்தை விழுங்கிவிட்டால், அதில் இருக்கும் கம் போன்ற பொருள் நமது வயிறில் ஒட்டிக்கொண்டு பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ற அஞ்சுவது உண்டு.
ஆனால், சூயிங்கம்-ல் இருக்கும் அந்த கம் போன்ற பொருள் நமது வயிற்றுக்குள் சென்றால் அது கரைவதற்கு சற்று நேரம் எடுத்துக்கொளமே தவிர, அது நமது வயிற்றுக்குலையே ஒட்டிக்கொள்ளாது. ஆனால் வயிற்று கோளாறு உள்ளவர்கள் இந்த விஷயத்தில் சற்று கவனமான இருப்பது அவசியம்.
அதேபோல் சில நேரங்களில் சூயிங்கம் தொண்டை பதகுதியில் சிக்கிக்கொண்டு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் அதிகம்.