சென்னை ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவித்த மும்பை மைதானம்!

0
158

மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள சில பகுதிகளில் மும்பை (mi) ரசிகர்கள் தவிர வேறு யாரும் வர அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்னை சூப்பர் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளன.

கடந்த முறை மும்பையில் இரு அணிகளும் விளையாடியபோது, CSK ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளித்தது.

இந்நிலையில், ஐ.பி.எல்.போட்டியில் வான்கடே மைதானத்தில் CSK ரசிகர்கள் அதிகமாக கூடுவதால், மைதானமே மஞ்சள் வண்ணத்துக்கு மாறி விடும் என்பதற்காக மும்பை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, தற்போது மி ஃபேன் ஜும் (Mi FAN Zone) என இரு கேலரிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கேலரிக்குள் சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இத்தகவல் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here