செம்மணி மனித புதைகுழி – நீதி கேட்டு தமிழகத்தில் ஆர்பாட்டம்

0
6

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் நீதிகோரி தமிழகத்தில் நேற்று முன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கோவை BSNL அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் வெ. ஆறுச்சாமி அவர்களும், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் அவர்களும், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மனி அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தின் தலைவர் நேருதாஸ், புரட்சிகர் இளைஞர் முண்ணனியின் மாவட்ட செயலாளர் மலரவன், சி‌.பி.எம்.ரெட் ஸ்டாரின் மாவட்ட பொறுப்பாளர் இனியவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தங்கராசு உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here