செயற்கை கடற்கரைக்கு முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளில் செல்ல அனுமதி மறுப்பு

0
174

கடற்கரை திறந்துவைக்கப்பட்ட முதல் நாளில் மோட்டார் சைக்கிள், மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொழும்பு போர்ட் சிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை பார்வையாளர்களுக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்று குதூகலமாக அங்குள்ள வளங்களை அனுபவித்தனர்.

இயற்கையான கடலையும் அதன் அலையையும் ஓரளவு கட்டுப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இரம்யமான கடற்கரை மற்றும் அதில் உள்ள விளையாட்டுக்கள், மற்றும் உணவகங்களை பார்வையிடவே மக்கள் வரிசையாக செல்கின்றனர்.

இந்த கடற்கரை திறந்துவைக்கப்பட்ட முதல் நாளில் மோட்டார் சைக்கிள், மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

காலி முகத்திடல் ஆரம்பத்தில் இருந்து குறித்த கடற்கரைக்கு செல்ல 5 கிலோ மீட்டர்கள் செல்ல வேண்டியுள்ளது. அதனாலயே இந்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த இடத்தை மோசமான முறையில் அசுத்த மாக்கியமையினால் சென்றுள்ளதால் இனிமேல் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளில் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என அங்குள்ள பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

எனவே, இனிமேல் போர்ட் சிட்டி செயற்கை கடற்கரைக்கு போவதாக இருந்தால் வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here