இந்த ஆமை 1882இல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆமை – 119 வயதை கடந்து கின்னஸ் சாதனை
செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.வயதானாலும் சுறுசுறுப்புடன் வலம் வரும் ஜோனாதன், இந்த ஆண்டு 191ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பான காணொளியை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.ஜோனாதன் என அழைக்கப்படும் குறித்த ஆமை கி.பி. 1832ஆம் ஆண்டு பிறந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆமை 1882இல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.ஆமையின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என அதற்கு சிகிச்சை அளித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ் தெரிவித்துள்ளார்.
Jonathan the tortoise is the world's oldest living animal and is celebrating his 191st birthday 🥰️
He lives on the remote island of St. Helena in the Atlantic Ocean and has been photographed on the island since 1882. pic.twitter.com/XCltA6XZbJ
— Guinness World Records (@GWR) November 30, 2023