விகாரகல தோட்டத்திலுள்ள பிளக்வுட் பாடசாலை கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளதால், அக்கட்டிடம் முழுமையாக புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய மதில்சுவரும் இ.தொ.காவின் உபதலைவர் செந்தில் தொண்டமானால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
விகாரகல தோட்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று,செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.