சைவ குருமார் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டி உள்ளது

0
171

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாகவும் கொரோனா நோய் தொற்று காரணமாகவும் பலர் இன்று பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதில் அறப் பணியாற்றும் எம் சைவ குருமார் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டி உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் சமூகத்துக்கும் இந்து மதத்திற்கும் அளப்பரிய தொண்டாற்றும் அகில இலங்கை இந்து குருமார் சங்கத்தின் கண்டி மாவட்ட கிளை குருமார்களுக்கும் மற்றும் பிராமண சமாஜனம் குருமார்களுக்கும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தேன் என அவர் தெரிவித்தார். மேலும் மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வழங்கப்பட்ட இந்த உணவுப் பொதிகள் இந்த முடக்க காலத்தில் எம் குருமார்களுக்கான ஒரு சிறிய உதவியாகும். தர்மத்தை பாதுகாக்கும் மற்றும் எமது சமூகத்தை அறவழியில் பயணிக்க முன்நிற்கும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களுடைய அற தொண்டை தொடர்ந்து ஆற்றி செல்ல நாம் கைகொடுப்பது எமது கடமையாகும்.

மேலும் கண்டி மாவட்டத்தில் வேதங்களை கற்பிக்கும் வேதாந்தா பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சர் தலைமையில் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது அங்கு பிரசன்னமாகி இருந்த குருமார்களுக்கு தெரிவித்த பாரத் அருள்சாமி அவர்களின் ஆசியையும் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here