சொந்தம் கொண்டாடும் கலாசாரம் ஸ்ரீபாத கல்லூரி சமூகத்தை சார்ந்தது; மைக்கல் ஜோக்கிம்!

0
165

கல்வி இராஜாங்க கல்வியமைச்சரின் ஸ்ரீபாதகல்வியற் கல்லூரி விஜயத்தின் பின்னர் அங்கு சுற்றாடல் உட்பட அனைத்து அம்சங்களிலும் சீர்கேடுகள் காணப்படுவதாக கவலை தெரிவித்த பின்னர் அது பெரும் சர்ச்சையாக வெடித்து பலரும் நிர்வாகத்தை குற்றம் சாட்டிய பின்னர் பீடாதிபதி தமக்குள்ள பிரச்சனைகள் குறித்து விளக்கி கல்லூரியில் காணப்படும் நிலைமைகளை ஊடகங்கள் பெரிதும் பெரிதுபடுத்தி எழுதியதாக ஆதங்கப்பட்டார்.

இந்த பின்னனியில் மலையகத்தின் ஒரு பொது சொத்தாக இருக்கும் இந்த கல்லூரிக்கு பீடாதிபதி. விரிவுரையாளர்கள் ஆசிரிய மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலை சமூகம் சொந்தம் கொண்டாமையே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் மலையத்தில் சொந்தம் கொண்டாடும் கலாச்சாரம் உருவாகும் வரை இவ்வாறான நிலைமை இங்கு மட்டுமல்ல பாடசாலைகள் மற்றும் மலையத்தின் பொதுசொத்துக்க்ள் விடயத்தில் தொடரும் என சுட்டிக்காட்ப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு பணியாளர்களைக்கொண்டு கல்லூரி வளாகத்தை முற்றாக சுத்தம் செய்துள்ளதாகவும். தற்போது கல்லூரி வளாகம் தூய்மையாக காணப்படுவதாகவும், சமையறை உட்பட மற்றைய பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதகாவும், எப்போதும் போலவே ஓதுக்கப்பட்டுள்ள நிதிக்கேற்ற முறையில் ஆசிரிய மாணவருக்கு சீரான முறையில் உணவு வழங்கப்படுவதாகவும் அறிய முடிகிறது.
பொதுமக்களினதும், மலையக சமூக நலனை விரும்பிகள், ஆகியோரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து கல்லூரியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சமூகத்தின் கருத்துக்கள் மதிக்கப்படுகின்றன என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் கல்லூரி வளாகத்தின் தூய்மையை பாதுகாக்கவும் மற்றைய பணிகளையும் மேற்;கொள்ளவும் மாணவ ஆசிரிர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாவும் அறிய முடிகிறது. எனவே கல்லூரி பீடாதிபதியும் நிர்வாகத்தினரும் சமூகத்தின் பாராட்டுக்கள்.
ஆயினும் விடயம் இத்துடன் சுமூகமான ஒரு முடிவுக்கு வந்துள்ளது என கருத முடியாது.

ஏனெனில் இதற்கு முன்னரும் இவ்வாறே பலமுறை இவ்வாறான நிலைமை ஏற்பட்டபோது நிர்வானத்தின் தலையீடு காரணமாக அல்லது நல்லெண்ணம் கொண்ட சில விரிவுரையாளர்களின் முயற்சிகாரணமாக இதே பாணியில் செய்யப்பட்ட அபிவிருத்தி பணிகள் அல்லது தூய்மையாக்கும் பணிகள் தக்கவைத்துக் கொள்ளப்படவில்லை அல்லது பேணப்படவில்லை என்பதே இவ்வாறான நல்லெண்ணத்துடன் செயல்பட்ட பலரினதும் அபிப்பிராயமாகும்..

இந்த பின்னனியில்; ஏற்கனவே ஏற்பட்டது போன்ற மோசமான நிலைமை எதிர்காலத்தில ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தக் கூடிய சான்றுகளை காணமுடியவில்லை.அதற்கு ஆக்குறைந்தது இரண்டு காரணங்களை சுட்டிக்காட்டலாம். முதலாவது இம்முறை அல்லது இதற்கு முன்னர் இவ்வாறான நிலைமை ஏற்பட மலையகத்தின் ஒரு பொது சொத்தான இந்த நிர்வனத்தை நிர்வாகத்தையோ, விரிவுரையாளர்களையோ அல்லது ஆசிரிய மாணவர்களையோ உள்ளடக்கிய பாடசாலை சமூகம் சொந்தம் கொண்டாமையே காரணம் என்பதை கடந்த முறையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கல்லூரி வளாகம் தூய்மையாயிருக்கிறது என்பதை தவிர இங்கு சொந்தம் கொண்டாடும் மன்பாங்கு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காணமுடியவில்லை – ஏனெனில் இது வரை தாங்கள் கல்லூரிக்கு சொந்தம் கொண்டாடுகிறோம் என்ற உரிமை கோரி பாடசாலை சமூகத்தை சாhந்த எவரும் பதில் எழுதவில்லை .

இரண்டாவதாக இம்முறையும் கல்லூரி நிர்வாகம் வேறு வழியின்றி நிர்ப்பந்தம் காரணமாக வளாகத்தை தூய்மைப்படுத்தியிருக்கிறது
என்று கருத வேண்டியுள்ளதே தவிர சொந்தம் கொண்டாடும் மனப்பாங்கினை வெளிக்காட்டும் செயலாக அனைவரும் ஒன்றிணைந்து சிரமதான மூலம் தூய்மைப்படுத்தும் பொறுப்பை ஏற்று செயல்படவில்லை என்றே வெளியில் இருந்து பார்க்கும் ஒருவரின் கருத்தாகும்.

சொந்தம் கொண்டாடும் கலாச்சாரத்தை வெளிக்காட்டாத நிலையில் எதிர்காலத்தால் தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரிய மாணவர் குழுக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றுமா என்பதற்கும் எந்தவித உத்தரவாதமும் தற்போதைக்கு இல்லை.

இவ்வாறு கருத்து தெரிவிப்பது ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு சமனாகும் என கருதப்படலாம. ஆயினும் “விளைவுகள் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை மட்டும் பார்த்து மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருத வேண்டாம். உண்மையான மாற்றம் ஏற்பட்டால் நிலையான விளைவுகள் ஏற்படும்”; என்று கூறுகிறார் ஒரு அறிஞர். இங்கு இந்த அறிஞர் குறிப்பிடுவது மனப்பாங்கு மாற்றமாகும்.

இந்த பின்னனியில் ஸ்ரீ பாத கல்லூரி சமூகத்;தில் “இது நமது சொத்து அல்லவே” என்ற மனப்பாங்கு மாறி கல்லூரிக்கு சொந்தம் கொண்டாடும் கலாச்சாரம் அல்லது மனப்பாங்கு ஏற்பட்டிருந்தால் மட்டுமே இன்றைய நிலைமையை தக்க வைத்துக்கொள்ள முடியும். அவ்வாறு ஸ்ரீ பாத கல்லூரி சொந்தம் கொண்டாடும் கலாச்சாரத்துக்கு மாறியிருக்கிறது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு கல்லூரி சமூகத்தை சார்ந்ததாகும்.

இன்னும் ஓரிரு மாதங்களில் கல்லூரி வளாகம் தொடர்ந்தும் தூய்மையாக காணப்படப்போகிறாதா? இல்லையேல் மீண்டும் காடாகப்போகிறா? என்ற காட்சியே கல்லூரியில் சொந்தம் கொண்டாடும் கலாச்சாரம் உருவாகியிருக்கிறதா இல்லாயா என்பதை சமூகத்திற்கு எடுத்துக் காட்டிவிடும்.

காலம் பதில் சொல்லும் வரை காத்திருப்போம்
எவ்வாறாயினும் மலையக சமூகத்தில் “ சொந்தம் கொண்டாடும் கலாச்சாரம் தளைக்கவேண்டும் என்பதே சமூகத்தில் அக்கறை கொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது என பிரிடோ நிறுவன தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார்.

ஆக்கரபத்தனை நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here