சௌமியமுரத்தி தொண்டமானுடைய ஆசையையும் எண்ணத்தையும் சிந்தனையும் செயற்படுத்துகின்ற ஒரு செயற்பாட்டாளராக கல்வி இராஜாங்க அமைச்சரை பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவிப்புமலையகத்திற்கு மட்டும் அல்லாது வடகிழக்கிலே இருக்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும்மாக சேவைசெய்கின்ற ஒரு தலைவராகவும் சௌமிய மூர்த்தி தொண்டமானுடைய ஒரு ஆசையையும் எண்ணத்தையும் சிந்தனையையும் செயற்படுத்துக்கின்ற ஒரு செயற்பாட்டாளராக பார்ப்பதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
கல்வி இராஜாங்க அமைச்சரின் 30வருடகால அரசியல் பயணத்தில் கால்பதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் உறையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கல்வியிலே மலையகத்தில் மாத்திரம் தனது புரட்ச்சியை ஏற்படுத்தவில்லை அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் வடகிழக்கில் கூட அவர் புரட்ச்சியை ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கிறார். கல்வி என்பது பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் முன்னிற்க்க வேண்டுமானால் கல்வி ஒரு முக்கிய இடத்தினை பிடித்திருக்கிறது. இந்த கல்வியை மலையக மக்கள் மத்தியில் மேலும் ஊற்றவேண்டும் மலையக மக்கள் ஏனைய சமூகத்தினரைவிட திகழவேண்டும் என அயராது உழைப்பை ஒரு முத்துதான் எங்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன்
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி என்பவர் தமிழுக்காகம் தமிழ்ர்களுக்காகவும் உள்நாட்டில் மட்டும் மல்ல வெளிநாடுகளுக்கும் சென்று குரல் கொடுத்து கொண்டு வருகிறார் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கின்ற இந்த காலகட்டத்திலே அபிவிருத்தி என்கின்ற பாதையை அதனுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் செயற்பட்டு வருகின்றார் இப்படிபட்ட ஒரு தலைவன் மலையகத்திற்கு கிடைத்தது பெறும் பாக்கியமாக நான் அதை கறுதுகிறேன்.
இந்த நிகழ்விற்கு வருகைதந்திருந்த கைதொழில் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கூட எங்கள் அமைச்சரை இன்று பாராட்டி இருந்தார்கள். இந்த தலைவரின் கரத்தையும் தொழிற்சங்கத்தையும் பலபடுத்தவேண்டி கடமையிருக்கிறது தனக்கென ஒன்றும் சேர்க்காமல் மக்களுக்காக இன்றும் கூறல் கொடுத்து கொண்டு இருக்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் தீர்க்காக போராடுகின்றார்கள் அந்த போரட்டத்திற்கு அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் அவர்களும் வழிசமைத்து கொண்டு இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)