சௌமியமூர்த்தி தொண்டமானின் சாதனைகள் பாடத்திட்டத்தில் உள்வாங்க பிரதமர் சிபாரிசு

0
178

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் உள்ளநாட்டிலும் சர்வதேசத்திலும் அங்கீகாரம் பெற்ற தலைவராகவும் இருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கான சிபாரிசை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் தினேஸ் குணவரத்னவுக்கு வழங்கியுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் பிரதமரிடம் விடுத்த கோரிக்கையின் பிரகராமே பிரதமர் இதற்கான சிபாரிசை வழங்கியுள்ளார்.

மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 108வது ஜனன தினம் கடந்த 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட நிலையிலேயே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாதனைகளை கல்வி பாடத்திட்டத்தில் உள்வாங்குதற்கான கோரிக்கையை செந்தில் தொண்டமான் பிரதமரிடம் விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here