ஜனநாயகத்திற்கு கிடைத்த நீதிமன்ற தீர்ப்பை ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்- இராதாககிருஸ்ணன் தெரிவிப்பு

0
176

ஜனநாயகத்திற்கு கிடைத்த நீதிமன்ற தீர்ப்பை ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுகின்றார் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வே.இரதாகிருஸ்ணன் அவர்கள்.

இன்று (04.12.2018) நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்

தொடர்ந்து இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்

இலங்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக இந்த நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. அதாவது அன்மையில் ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கபட்ட புதிய பிரதமர் உட்பட அமைச்சர்களின் நிமனம் தற்காலிகமாக இடை நிருத்தியமை. இது ஒரு நல்ல லிடயம். இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது என்பதற்கும் நாட்டில் நல்லாட்சி காரணமாக ஜனநாயகம் நிலைத்து செயற்படுகின்றது என்பதை உறுதிபடுத்துகின்றது. எனவே இந்த நாட்டில் ஜனநாயகம் காக்கபட வேண்டுமானால் பாராளுமன்ற தீர்ப்புகளையும் நிதிமன்ற தீர்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளபட வேண்டும். இவ்வாறன நிலையிலேயே நாட்டில் நல்லாட்சி நிலைத்து நிற்கும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டியதும் அதனை ஏற்றுக் கொள்ளபட வேண்டியதும் கட்டாயமானதாகும் என்று கூறினார்.

 

பா. திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here