உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல், இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஜெலென்ஸ் மேலும் பதிவிட்டிருப்பதாவது,
“உக்ரைனின் சுதந்திர தினத்தன்று அன்பான மற்றும் நேர்மையான வாழ்த்துக்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி மற்றும் செழிப்புக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் அடிப்படையில் இலங்கையுடனான நட்புறவுகள் மற்றும் ஒத்துழைப்பை உக்ரைன் மதிக்கிறது.
இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தரும் வகையில், எங்கள் உறவுகள் மேலும் வளர்ச்சிக்கு சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன என்று நாங்கள் நம்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் தலைவருக்கு அனுப்பிய முறையான கடிதத்தில், ஜனாதிபதி இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.