ஜனாதிபதி உள்ளிட்ட ஆளுத் தரப்பினருக்கு கடும் அச்சுறுத்தல் – பிரதி அமைச்சர் தகவல்!

0
122

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டு மக்களே அவர்களின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள பாதாள உலக மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களை தற்போதைய அரசாங்கம் கடுமையாக கையாளுகின்றது.

இதனால் அரசாங்க தரப்பினர்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி ஒரு பாதாள உலகக் குழுவிற்கு உதவினால், மற்றொரு பாதாள உலகக்குழு அவர்களை எதிர்க்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டவுடன், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், அதிலிருந்து வெளியேற முற்பட்டால் உயிரை பறிகொடுக்க நேரிடும் எனவம் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான பகுப்பாய்வுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குப் பாதுகாப்புத் தேவைப்பட்டால், அது குறித்து எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here