ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 40 கைதிகள் விடுதலை

0
169

சிறு குற்றம் புரிந்த தண்டனைப் பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 40 கைதிகள் விடுதலை
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண் கைதி உட்பட 40 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறு குற்றம் புரிந்த தண்டனைப் பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம சிறைச்சாலை அதிகாரி ஏ.பீ.பானுக தயந்தசில்வா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here