ஜப்பானில் விற்பனையில் முன்னணியில் உள்ள “கரப்பான் பூச்சி பீயர்”

0
187

பூச்சிகள், புழுக்கள், ஈக்கள் போன்றவற்றையும் ஒரு பகுதியாக சாப்பிடும் தெற்காசிய நாடுகளும் உள்ளன. அவர்களின் உணவுகள் நமக்கு அருவருப்பாக இருந்தாலும் , அது அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

இப்போது, பூச்சிகளை உண்பது காட்டுமிராண்டித்தனமானது என்று நீங்கள் நினைத்தால், கரப்பான் பூச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பீயர் பற்றி கீழே படிக்கும் வரை காத்திருங்கள்.

கரப்பான் பூச்சி பீயர் என்றவுடன் உங்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் ஜப்பானில் உள்ளவர்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் குடிக்கிறார்கள். இங்கு உள்ளவர்கள் இந்த பீயரை ‘பூச்சி கசப்பு’ என்று அழைக்கின்றார்கள்.

இந்த பியர் நன்னீரில் காணப்படும் கரப்பான் பூச்சிகளால் ஆனது, அவை தண்ணீரில் காணப்படும் மற்ற பூச்சிகள் மற்றும் மீன்களுக்கு உணாகின்றன அவை பிடிபட்டவுடன், அவற்றை வெந்நீரில் வேகவைத்து மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும். பின்னர், கரப்பான் பூச்சியின் சாறு எடுத்து பானமாக மாற்றப்படுகிறது.

இந்த கரப்பான் பூச்சி மிகவும் சுவையானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு நல்ல தரமான இறாலுடன் ஒப்பிடப்படுகிறது. இந்த பூச்சிகளை வேகவைத்து உண்ணலாம் அல்லது சூப்களுக்கு சுவையூட்டலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு பீயர் பாட்டிலின் விலையும் சுமார் 1,500 இலங்கை ரூபாய் எனத் தெரியவருகின்றது . இந்த பீயர் ஜப்பானில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பயன்படுத்தப்படும் ‘கபுடோகாமா’ எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here