ஜிமெயிலில் புதிய அப்டேட்!

0
5

உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ஜிமெயில் கணக்குகள் உள்ளன. பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஜிமெயிலில் புதிய டூல் ஒன்றை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. மெயில் இன்பொக்ஸ்களில் குவியும் செய்தி கடிதம் உள்ளிட்ட அவசியமற்ற மெயில்களை மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய டேப் கீழ் கொண்டு வர ஜிமெயில் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு செய்யும்போது செய்தி கடிதம், டீல்ஸ் மற்றும் வியாபார ரீதியிலான மெயில்களை எளிதில் கண்டறிந்து நீக்கவோ வகைப்படுத்த முடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்பொக்ஸ்களில் தேவையின்றி குவிந்து இருக்கும் மெசேஜ்களை பில்டர் செய்து தேவையான மெயில்களை மட்டும் எளிதில் பார்க்க முடியும் என்பதால் ஜிமெயில் பயன்படுத்துவர்கள் மத்தியில் இந்த வசதி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here