கொழும்பில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கிபயணித்த ஜீப்வண்டி விபத்துக்குள்ளாகியதில் மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிதீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து பொகவந்தலாவ இராணிகாடு தோட்டபகுதியை நோக்கிபயணித்த ஜீப் வண்டி ஒன்று ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஸ்டெதன் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் ஜீப்வண்டியில் பயணித்த மூன்றுபேரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் 05.11.2018.திங்கள் கிழமை விடியற்காலை 05.15மணி அளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஜீப்வண்டியில் பயணித்த மூன்று பேரும் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை பெற்று கொண்டு கொழும்பில் இருந்து பொகவந்தலாவ இராணிகாடு தோட்டபகுதியை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேலையில் ஹட்டன் செனன் ஸ்டெதன் பகுதியில் உள்ள மண்மேடு ஒன்றில் ஜீப்வண்டி மோதி ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தடம் புரண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
இந்த விபத்து காரணமாக ஜீப்வண்டி அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜீப்வண்டியினை செலுத்திய சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டுள்ளமையாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காயங்களுக்கு உள்ளான மூன்று பேரும் தொடர்ந்தும் டிக்கோயா ஆதரா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)