ஜீவனின் பணிப்புரைக்கமைய தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை

0
252

நுவரெலியா – இராகலையில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரனின் ஆலோசனைக்கமையவும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு, தோட்ட நிர்வாகத்துடனும் தொடர்புகொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

தற்காலிக இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் மேலதிக தேவைப்பாடுகளை அறிவதற்காகவும், மாற்று தங்குமிட ஏற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய அவரின் பிரதிநிதியாக இ.தொ.காவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சக்திவேல்  (06.07.2023) தோட்டத்துக்கு சென்றிருந்தார்.

மக்களுடன் கலந்துரையாடிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அமைச்சரால் வழங்கப்பட்ட தகவல்களையும் பரிமாற்றிக்கொண்டார்.

மேலும், அவர்களுக்கு தேவையான மாற்று நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், தேவையான வசதிகளையும் சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பெற்றுக் கொடுத்துள்ளார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here