ஜீவனின் பிறந்த தினத்தில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தீர இ.தொ.கா ஆலங்களில் .கூட்டு பிரார்த்தனை.

0
210

ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பிறந்த தினத்தில் ஆசிரியர்களின் சம்பள முறண்பாட்டினை தீர்க்கும் வல்லமையும் பலமும் கிடைக்க வேண்டும் என கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் கல்வியியல் ஒன்றியம் மலையக ஆலங்களில் ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைத்துக்கொண்டு கூட்டு பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.

இந்த கூட்டு பிரார்த்தனையின் பிரதான நிகழ்வு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஹட்டன் பன்மூர் அம்மன் ஆலயத்தில் முன்னாள் மத்திய மகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சிரேட்ட உப தலைவருமான கணபதி கணகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதில் பல பாடசாலைகளை சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வு குறித்து முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் கருத்து தெரிவிக்கையில்..

ஆசிரியர்கள் என்பவர்கள் மன ரீதியாக தொழில் செய்பவர்கள்.அவர்களின் மனோநிலை சரியாக இருந்தால் மாத்திரமே அவர்கள் தொழிலை சரியாகவும் நேர்த்தியாகவும் செய்ய முடியும், அதன் மூலமே மாணவர்களுக்கு தரமான கல்வியினை வழங்க முடியும்.இன்று நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையினையும் தீர்க்கப்பட வேண்டும்.தற்போதைய எமது அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும், இந்த ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம் அதே நேர்த்திலே பலர் இதை அரசியல் ரீதியாக அனுகி அரசியல் இலாபம் தேட முற்படுகின்ற வேளையிலே நாங்கள் பிரார்த்தனையினூடாக தற்போதைய அரசாங்கத்திற்கு வல்லமையும் பலமும் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுப்படுகிறோம்.

அதே நேரம் தோட்டப்பகுதியில் தொழிலாளர்கள் இன்று பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் தோட்ட நிர்வாகங்கள் அவர்களை இறுக்கி வேலை வாங்கும் நிலைக்கு தோட்டத்தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் தொழில் அமைச்சு தொழில் திணைக்களம் மூன்றும் ஒன்றாக இணைந்து தொழிலாளர்களுக்கு எதிராக நடைபெறுக்கின்ற அட்டூழியங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறோம் என அவர் இதன் போது தெரிவித்தார்.
இதன் போது ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு ஆசி வேண்டியும் விசேட பூஜைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கணகராஜ மற்றும் ஆசிரியர் எம்.ரமேஸ் கருத்து தெரிவிக்கையில்.

கே.சுந்தரலிங்கம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here