இலங்கை தொபிலாளர் காங்கிரஸில் புதிதாக பிரதி பொது செயலாளராக பதவியேற்றுள்ள ஆறுமுகம் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமான் நுவரெலியா பிரதேச தோட்டப்பகுதிகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமானின் வழிகாட்டலுக்கு அமைவாக நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தலமையில் இந்த மக்கள் சந்திப்பு நானுஓயா டெஸ்போட், நானுஓயா நகரம், மட்டுக்கலை , டி.ஆர்.ஐ, கெல்சி மாஎளிய, மார்காஸ் தோட்ட , பீற்று, சமர்ஹில், கோட்லோஜ், போட்ஸ்வூட், மற்றும் எஸ்கடேல் போன்ற தோட்டப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது இவருடன் மாகாண சபை உறுப்பினர் எ.பி.சக்திவேல் மற்றும் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் உட்பட நுவரெலியா பிரதேச சபை உறுப்பினராகள் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி சந்ரு