ஜீவன் தொண்டமான் ஆலோசனைக்கு அமைவாக பாடசாலைகளுக்கான “புகைப்பட நகல் இயந்திரம்” வழங்கும் நிகழ்வு

0
189

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக ,நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான “புகைப்பட நகல் இயந்திரம்” வழங்கும் நிகழ்வு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் நுவரெலியா வலயக்கல்விப்பணிமனையில் இடம் பெற்றது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

அவை பின்வருமாறு,

#நுவரெலியா கல்வி வலயம்

01.பாரதி தமிழ் மகா வித்தியாலயம் 1,880,000.00

02.சென்சேவியர் தமிழ் மகா வித்தியாலயம் 990,000.00

03.கொட்டகலை தேசிய பாடசாலை 1,500,000.00

#ஹட்டன் கல்வி வலயம்

01.எனென்டல் தமிழ் மகா வித்தியாலயம்
4,290,000.00

02.புனித கேப்ரியல் மகளிர் கல்லூரி 3,800,000.00

03.புனித கேப்ரியல் மகளிர் கல்லூரி 2,450,000.00

04.அயரபி தமிழ் வித்தியாலயம் 240,000.00

#கொத்மலைக் கல்வி வலயம்

01.தெற்கு மடக்கும்புற தமிழ் வித்தியாலயம் 2,280,000.00

02.பாரதி ஆரம்பப் பிரிவு பாடசாலை 4,360,000.00

03.மேமலை தமிழ் வித்தியாலயம் 1,863,000.00

#வலப்பனை கல்வி வலயம்

01.ஐபோரஸ்ட் தமிழ் மகா வித்தியாலயம்
90,000.00

02.எலிக் வித்தியாலயம் 1,400,000.00

இந்நிகழ்வில் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜா, முன்னாள் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர் செல்வன் , வலயக்கல்விப்பணிப்பாளர் D.M.L அபயரத்தின , உதவி கல்வி பணிப்பாளர் கணேஷ் ராஜ் ,கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here