சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளை நெருக்கடி இன்றி தொடர்ச்சியாக வழங்குவதற்கான பொறிமுறையானது, ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும், என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகள் மாத்திமே இயங்கும் என தெரிவித்துள்ள நிலையில், இது ஒரு முடக்கல் சூழ்நிலை அல்ல, ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்கும் என்றும், நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் ஆகவே இந்த காலகட்டத்தில் மக்களின் ஆதரவு தேவை என்றும், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டீசல் பற்றாக்குறையால்,எரிபொருள் நிலைமை சீராகும் வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




