பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம் இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளை தௌிவுபடுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு பிணை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரை 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதவான் சுதேஷ் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.
பின்னிணைப்பு – 04.00 பி.ப
எவ்வாறாயினும் இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படாத ஞானசார தேரர், தனது பிணை நிபந்தனைகளை பெற்றுக் கொள்வதற்காக இன்று மாலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.