பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதன அதிகரிப்பை தொடர்ந்து,
பெருந் தோட்டங்களில் தொழிலாளர்களின் மீது பல்வேறு வேலை பழு மற்றும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்தவரிசையில் வேலைநாட்கள் குறைப்பு,அரைநாள் சம்பளம் வழங்குதல், மேலதிக கொழுந்து பறித்தலுக்கு
கொடுப்பனவு வழங்குவதில்லை போன்ற பிரச்சனைகளை முன்வைத்தும் கூட்டு ஒப்பந்த முறையை மீண்டும் வேண்டுமென கோரியும் டயகம மேற்கு,டயகம கிழக்கு மற்றும் அக்கரப்பத்தனை பகுதிகளில் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக குறித்த ஆர்பாட்ட பகுதிகளுக்கு விஜயத்தை தேற்கொண்டுள்ள நுவரெலீயா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் தலைமையிலான இ.தொ.கா வின் விசேட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு உரிய தீர்வினை பெற்று கொடுக்கும் முகமாக கலந்துரையாடினார்கள்.
இதன்போது உரையாற்றிய ராமேஸ்வரன் தோட்டத்தொழிலாளர்களுக்கு இனியும் தோட்ட நிர்வாகங்களால் பிரச்சனைகள் எழக்கூடாது.தோட்ட நிர்வாகங்களின் அடக்குமுறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் அதற்கான முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் மக்களுக்கு இ.தொ.காவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் வழங்குவதாகவும் இந்த போராட்டம் வெற்றியடைய முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்