டயகம தூய அந்தோனியார் ஆலய வருடார்ந்த திருவிழா ஒரே குடும்பம்,ஒரு அவை,ஒரே மறைப்பணி எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது.
கண்டி மறைமாவட்ட குருமுதல்வர் அஅதிவணக்கத்துக்குறிய எல்வின் பீட்டர் பெர்ணான்டோ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இத் திருவிழாவின் போது டயகம பகுதியில் காணப்படுகின்ற ஏராளமான பொதுமக்கள் இன,மத வேறுபாடின்றி கலந்து சிறப்பித்தனர்.
கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டும்,பங்கு தந்தை மற்றும் குருமுதல்வர் ஊடாக சொற்பொழிகளும் ஆற்றப்பட்டது .மேலும் தேவாலயத்தில் இருந்தவர்களுக்கு நற்கருணை வழங்கி வைக்கப்பட்டதோடு புனித அந்தோனியாரின் திருவுருவ சிலை டயகம நகர் முழுவதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டு அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டு டயகம புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
நீலமேகம் பிரசாந்த்