டயகம பகுதியில் இன்றும் எரிவாயு அடுப்பு வெடிப்பு

0
138

மலையகத்தில் அண்மை காலமாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன இன்று ம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் நட்போன் தோட்டத்தில் தனி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை கேஸ் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்று 21 ம் திகதி காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு சிலிண்டரில் இதிலிருந்து எரிவாயு கசிந்துள்ளது இதனையடுத்து அடுப்பும் வெடித்துள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தார்
குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக அடுப்பு முழு சேதமடைந்துள்ளது அத்தோடு எவருக்கும் உயிர் ஆபத்துக்கள் காயங்கள் ஏற்படவில்லை இதுதொடர்பான விசாரணையை டயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here