டயகமவில் வெள்ளம் பெருக்கெடுத்தமைக்கு காரணமான ஆற்றை அகலப்படுத்த ராதாகிருஸ்ணன் துரித கதியில் நடவடிக்கை.

0
224

டயகமவில் 03.06.2021 ஏற்பட்ட வெள்ளத்தில் 62 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு 20 ஏக்கர் விவசாய நிலங்களும் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது.இந்நிலையில் குறித்த தோட்ட மக்கள் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணனிடம் தெரிவித்ததையடுத்து நுவரெலியா மாவட்ட அனத்த முகாமைத்துவ காரியாலயத்தை தொடர்பு கொண்டு குறித்த ஆற்றை அகலப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை இரவோடுடிரவாக மேற்கொண்டார்.

இந்நிலையில் 04/06/2021 நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலய கள ஊழியர்களூடாக ஆற்றை அகலப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் ஆற்றை அமைப்பதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here