டாப் 10-ல் மீண்டும் சாட்விக்-ஷிராக் ஜோடி; லக் ஷயா, உன்னதி ஹூடாவும் முன்னேற்றம்!

0
8

பாட்​மிண்​டன் தரவரிசை பட்​டியலை உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் வெளி​யிட்​டுள்​ளது. இதில் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மீண்​டும் 10-வது இடங்​களுக்​குள் நுழைந்​துள்​ளது.

பாட்​மிண்​டன் தரவரிசை பட்​டியலை உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் வெளி​யிட்​டுள்​ளது. இதில் கடந்த வாரம் நடை​பெற்ற சீனா ஓபன் பாட்​மிண்​டன் தொடரில் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் அரை இறுதி வரை முன்​னேறி​யிருந்த இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்​கிரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 3 இடங்​கள் முன்​னேறி 10-வது இடத்தை பிடித்​துள்​ளது.

ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் லக் ஷயா சென், 2 இடங்​கள் முன்​னேறி 17-வது இடத்தை பிடித்​துள்​ளார். அவர், 54,442 புள்​ளி​கள் பெற்​றுள்​ளார். ஹெச்​.எஸ்​.பிர​னாய் இரு இடங்​கள் முன்​னேற்​றம் கண்டு 40,366 புள்​ளி​களு​டன் 33-வது இடத்​தில் உள்​ளார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு தரவரிசை​யில் 17 வயதான இந்​தி​யா​வின் உன்​னதி ஹூடா 4 இடங்​கள் முன்​னேறி 31-வது இடத்தை பிடித்​தார். தரவரிசை​யில் உன்​னதி ஹூடா 31-வது அடைவது இதுவே முதன்​முறை​யாகும். கடந்த வாரம் நடை​பெற்ற சீன ஓபன் தொடரின் கால் இறுதி சுற்​றில் உன்​னதி ஹூடா, இரு முறை ஒலிம்​பிக் சாம்​பிய​னான பி.​வி.சிந்​துவை வீழ்த்​தி​யிருந்​தார்.

பி.​வி.சிந்து தரவரிசை​யில் 15-வது இடத்​தில் தொடர்​கிறார். மகளிர் இரட்​டையர் பிரிவு தரவரிசை​யில் இந்​தி​யா​வின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 11-வது இடத்​தில் தொடர்​கிறது. தனிஷா கிரஸ்​டோ, அஸ்​வினி பொன்​னப்பா ஜோடி இரு இடங்​கள் முன்​னேறி 45-வது இடத்​தை பிடித்​துள்​ளது.

மக்காவ் ஓபன் பாட்மிண்டனில் ட்ரீசா ஜாலி, காயத்ரி ஜோடி தோல்வி: மக்​காவ் ஓபன் பாட்​மிண்​டன் தொடரில் மகளிர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி முதல் சுற்​றில் தோல்வி அடைந்​தது.

சீனா​வின் மக்​காவ் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் உலக தரவரிசை​யில் 10-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்​கில் மலேசி​யா​வின் லோ ஹாங், சியோங் ஜோடியை வீழ்த்​தி​யது.

மகளிர் இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-16, 20-22, 15-21 என்ற செட் கணக்​கில் சீன தைபே​வின் லின் ஜியோவோ மின், பெங்க யு வெய் ஜோடி​யிடம் போராடி தோல்வி அடைந்​தது.

மகளிர் ஒற்​றையர் பிரிவு தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் அன்​மோல் கார்ப் 21-11, 21-13 என்ற செட் கணக்​கில் அஜர்​பைஜானின் கெய்ஷா பாத்​திமா அஸ்​ஸா​ராவை​யும், தஷ்னிம் மிர் 21-14, 13-21, 21-17 என்ற செட் கணக்​கில் தாய்​லாந்​தின் டிடாப்​ரான் கிளீபி​யீசனை​யும் வீழ்த்தி பிர​தான சுற்​றுக்​கு முன்​னேறினர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here