டிக்கோயா எட்லிதோட்டத்தில் பாரிய மண்சரிவு-30குடும்பங்களை சேர்ந்த 110பேர் இடம் பெயர்வு!!

0
241

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா எட்லி தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் டிக்கோயா சலங்கந்த பிரதான வீதியின் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்இதேவேலை இந்த மண்சரிவு காரணமாக டிக்கோயா எட்லி தோட்டத்தில் உள்ள 30குடும்பங்களை சேர்ந்த 100கும் மேற்பட்டோரை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வழியுருத்தபட்டுள்ளது

இந்த சம்பவம் 13.08.2018 திங்கள் கிழமை விடியற்காலை 05.30 மணிஅளவில் இடம் பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மற்றும் நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதி ரவி குழந்தைவேல் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்று நிலமையை அறிந்து அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.டி.பி.சுமனசேகரவின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்குமாறு அறிவுருத்தல் வழங்கபட்டுள்ளது.

DSC03910 DSC03917

இதேவேலை குறித்த பகுதியில் உள்ள உயர்தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் நலன்கருதி வீதியில் காணபடும் மண் மேற்றினை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நோர்வூட் பிரதேசசபை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவநவ்தலா நிருபர் சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here