டிக்கோயா நுண்கலை கல்லூரியில் 58 பேர் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி.

0
194

வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 82 மாணவர்களில் 58 பேர் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக அக்கலூரியின் அதிபர் எம்.மூவேந்தன் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையிலிருந்து வர்த்தக பரிவில் 10 பேர் தோற்றியுள்ளதாகவும் அதில் கணக்கியலில் 90 சதவீதமான மாணவர்களும், பொருளியல் பிரிவில் 60 சதவீதமான மாணவர்களும், வணிக பிரிவில் 70 சதவீதமான மாணவர்களும் சித்திபெற்றுள்ளனர். கலைப்பிரிவில் 72 தோற்றி 55 மாணவர்கள் பல்கலைகழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழ் பாடத்தில் 91 சதவீத மாணவர்களும், அரசியல் விஞ்ஞானப்பாடத்தில் 95 சதவீத மாணவர்களும், புவியியல் பாடத்தில் 89 சதவீதமான மாணவர்களும், வரலாறு பாடத்தில் 60 சதவீதமான மாணவர்களும், இந்து சயத்தில் 95 சதவீதமான மாணவர்களும், நாடகமும் அரங்கவியல், கர்நாடக சங்கீதம், கிறீஸ்த்தவம், சித்திரம் ஆகிய பாடங்களில் 100 சதவீதமான மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.

இதில் வர்த்தக பரிவில் ஐ.ரி.அஜித்குமார் 03 B சித்திகளையும், ந.ரிசாந்தனி A, B, C சித்திகளையும் பெற்றுள்ளனர். நுண்கலைப்பரிவில் கே.கிசாந்தினி 2B,C சித்திகளையும், ஜே.கௌசல்யா A,B,C சித்திகளையும், கிருஸ்ணரூபி 2B,C சித்திகளையும் ஜே.ஜஸ்டின்ராஜ் 3B சித்திகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here