2022 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, டிக்டாக் செயலியை அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தோனேஷியாவே சுமார் 160 மில்லியன் பயனார்களை கொண்டுள்ளது
இந்தோனேசியாவில் பல அனாதை ஆச்சிரமங்களும் முதியோர் இல்லங்களும் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. இந்நிலையில் ஒருசில அனாதை ஆச்சிரமங்கள் வருமானம் ஈட்டிக்கொள்வதற்காக டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக இந்தோனேசியாவின் “முதியாரா முலியா”அனாதை ஆச்சிரமம் தொடர்ந்தும் புதிய வீடியோ பதிவுகளை டிக்டாக் செயலியில் பகிர்ந்து தங்களுக்கான தொடர் வருமானத்தை ஈட்டிவருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் முதியாரா முலியா”அனாதை ஆச்சிரம நிறுவனர் தெரிவிக்கையில்,
இந்தோனேஷியாவில் டிக்டாக் செயலியின் மூலம் பல அனாதை ஆச்சிரமங்கள் தங்களுக்கான வருமானத்தை ஈட்டி வருகின்றன. இதனை ஒரு யோசனையாக வைத்தே நாங்களும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுப்பட ஆரம்பித்தோம் என்றார்.
ஒவ்வொரு நாளும் இரவில்,“முதியாரா முலியா”அனாதை ஆச்சிரமத்தின் டிக்டாக் கணக்கு செயற்படுத்தப்படும். அதுவும் டிக்டாக்கில் நேரலை காண்பிக்கப்படும்.
இந்த நேரலையில் ஒரு மெல்லிய இசை ஒலிக்கவிடப்படும்.அதன் பின்னர் அங்குள்ள குழந்தைகள் அமைதியான முறையில் உறங்குவர்.
இதேவேளை கடந்த பெப்ரவரியன்று “முதியாரா முலியா” அனாதை ஆச்சிரமத்தினால் வெளியிடப்பட்டடிருந்த காணொளி பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நன்கொடைகளை அனுப்புமாறு பார்வையாளர்களிடம் கெஞ்சும்போது வயதான பெண்கள் தண்ணீர் மற்றும் சேற்றில் பல மணிநேரம் அமர்ந்திருக்கும் வீடியோக்களை தொடர்ந்து இந்த போக்கு வைரலானது.
இந்த டிக்கடாக் செயலி தற்போது நன்கொடைகளை பெறுவதற்கான தளமாக உருவெடுத்துள்ளது.2022 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, டிக்டாக் செயலியை அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தோனேஷியாவே சுமார் 160 மில்லியன் பயனார்களை கொண்டுள்ளது.