டிஜிட்டல் தொழினுட்பத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்கள்!

0
67

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் செயற்பாடுகளை இலகுபடுத்தும் முறையை புதிதாக அறிமுகம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.ஒருமாத காலத்திற்குள் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வேரஹெரயிலுள்ள அலுவலகத்திற்கு செல்லும் நிலையை தவிர்க்கும் நோக்கில்,இம்முறைமை அறிமுகம் செய்யப்படவு ள்ளது.சாரதிகளின் அலைச்சல் மற்றும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here