டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

0
274

182 ஓட்டங்களை என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 14 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை ஓட்டங்களை பெற்றது.
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்க்கும் இடையில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அமெரிக்க கிரிக்கெட் எண்டர்பிரைசசினால் ஒழுங்கு செய்யப்பட்ட மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் (Grand Prairie Stadium) இன்றைய தினம் ஆரம்பமானது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை பெற்றது.டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சார்பில், டேவிட் மில்லர் 42 பந்துகளில் 61 ஓட்டங்களையும் டெவோன் கான்வே 37 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அலி கான் (Ali Khan) மற்றும் லாக்கி பெர்குசன் (Lockie Ferguson) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.அதற்கமைய 182 ஓட்டங்களை என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 14 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை ஓட்டங்களை பெற்றது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 34 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றார்.பந்துவீச்சில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முகமது மொஹ்சின் (Mohammad Mohsin) நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here