டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

0
180

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் படி பதின்மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக தொற்றுநோய் வலயங்களாக நியமிக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை பதின்மூவாயிரத்து முன்னூற்று இரண்டு.

கம்பஹா மாவட்டத்தில் 13 ஆயிரத்து 170 டெங்கு நோயாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் நான்காயிரத்து எண்பத்து மூன்று டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மேலும், இம்மாதத்தில் தொள்ளாயிரத்து அறுபது டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்க கூடும் எனவும் அதனால் டெங்கு பரவல் அதிகரிக்க கூடும் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here