டெல்டாவை விட மிகவும் ஆபத்தான லெம்டா வைரஸ்- சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

0
173

இலங்கையில் லெம்டா கொவிட் மாறுபாடு பரவியுள்ளதா என ஆராயும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெல்டா மாறுபாட்டை விடவும் மிகவும் ஆபத்தான லெம்டா மாறுபாடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அருகில் அவ்வாறான ஆபத்துக்கள் உள்ளதென பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here