டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஓய்வு அறிவித்த தென்னாபிரிக்க வீரர்.

0
208

தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயின்டன் டிகொக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

செஞ்சூரியனில் வியாழன் அன்று நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

29 வயதான டி கொக், தென்னாபிரிக்காவின் தற்காலிக டெஸ்ட் 2021 இல் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் தென்னாபிரக்கா இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் 50 சதவீத வெற்றியை பதிவுசெய்துள்ளது.

தென்னாபிரிக்கா இலங்கையை சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வென்றது, ஆனால் அதே வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

டி கொக் 2014 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானர். இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 38.82 சராசரியுடன் 6 சதங்கள் அடங்கலாக 3,300 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here