அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் 50 லட்சம் பெருமதியான பாதை அபிவிருத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இவ்வடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
அதே சந்தர்ப்பத்தில் பெல்மோரல் தோட்டத்தில் நீர்விநியோக திட்டம் மற்றும் பாதை அபிருத்தி திட்டத்துக்கு முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் பழனி சக்திவேல் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதன்போது அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் கதிர்ச்செல்வன்,சச்சிதானந்தன் உட்பட தோட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இவ்வடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த், டி. சந்ரு