ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமா வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், மருத்துவ உதவி நிதியை குறைக்கும் மசோதாவை மெடிக் எய்ட் (medic aid) என்ற பெயரில் ட்ரம்ப் கொண்டு வந்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது,
மசோதாவை அவை நிறைவேற்றினால் அது செலவுகளை அதிகரிக்கும். அடுத்த தலைமுறையினருக்கும், தொழிலாளர் வர்க்க குடும்பங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இன்றே உங்கள் பிரதிநிதியை இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்கச் சொல்லுங்கள்.இவ்வாறு ஒபாமா தெரிவித்துள்ளார்.