தங்கநகை களவாடியவருக்கு விளக்கமறியல்; நுவரெலியா, நானுஓயாவில் சம்பவம்

0
61

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் தங்க நகை மற்றும் பணத்தை களவாடிய நபர் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி வீடொன்றில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் புகுந்த குறித்த நபர் 810.000 ரூபாய் பெறுமதியான தங்க நகை, மற்றும் பணத்தை களவாடியதாக நானுஓயா பொலிஸ் பிரிவில் (23) திகதி முறைப்பாடு வழங்கப்பட்டது.இதனை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர் நானுஒயா சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதோடு விசாரணையின் பின்னர் அவரிடமிருந்து நகைகள்,பணம் மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை என்பன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here