தொடரூந்து ஒன்று தடம் புரண்டதன் காரணமாக நேற்று (25) மாலை முதல் பாதிக்கப்பட்ட மலையகத்திற்கான புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டு சென்ற புகையிரதம் கொழும்பு பதுளை பிரதான புகையிரத வீதியில் நேற்று (25) மாலை மூன்று முப்பது மணியளவில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கும் ரொசல்லையிற்கும் இடையில் தடம் புரண்டதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து புகையிரத திணைக்களத்தின் ஊழியர்கள் நேற்று இரவு தடம் புரண்ட புகையிரத்தத்தினை மீண்டும் தண்டவாளத்தில் இருத்தி புகையிரத பாதையினை சீர் செய்ததனை தொடர்ந்து கொழும்பு, கண்டி, பதுளை ஆகிய பிரதான புகையிரத சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன.
மலைவாஞ்ஞன்