தடைகளை உடைக்க விரும்புகிறோம்: சொல்கிறார் ஹர்மன்பிரீத் கவுர்

0
15

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டிராபி சுற்றுப்பயண தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைகியா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் சக வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமி ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பட்​டம் வெல்ல முடி​யாததற்​கான தடைகளை உடைக்க நாங்​கள் விரும்​பு​கிறோம். அனைத்து இந்​தி​யர்​களும் இதற்​காக காத்​திருக்​கின்​றனர். உலகக் கோப்​பைகள் எப்​போதும் சிறப்பு வாய்ந்​தவை, என் நாட்​டிற்​காக ஏதாவது சிறப்​பாகச் செய்ய வேண்​டும் என்று விரும்​பு​கிறேன். யுவ​ராஜ் சிங்கை பார்க்​கும் போதெல்​லாம் அது எனக்கு நிறைய உந்​துதலைத் தரு​கிறது.

உலகக் கோப்பை தொடருக்கு முன்​ன​தாக உள்​நாட்​டில் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான ஒரு​நாள் போட்டி தொடரில் விளை​யாட உள்​ளோம். ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக விளை​யாடு​வது எப்​போதுமே சவாலானது. இந்த தொடரின் வாயி​லாக எங்​கள் நிலை என்ன என்​பதை நாங்​கள் அறிந்​து​கொள்​வோம்.

எங்​கள் பயிற்சி முகாம்​களில் நாங்​கள் நிறைய முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறோம், அதன் முடிவு​கள் களத்​தில் வெளிப்​பட்டு வரு​கின்​றன. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான அரை இறுதி ஆட்​டத்​தில் நான் விளாசிய 171 ரன்​கள் மிக​வும் சிறப்பானது.

அந்த இன்​னிங்ஸ் எனக்​கும் ஒட்​டுமொத்த மகளிர் கிரிக்​கெட்​டுக்​கும் மிக​வும் சிறப்​பான ஒன்​று. அந்த ஆட்​டத்​துக்கு பிறகு நிறைய விஷ​யங்​கள் மாறியது. இறு​திப் போட்​டி​யில் நாங்​கள் தோல்வி அடைந்து நாடு திரும்​பிய​போது, நிறைய பேர் காத்​திருந்து எங்​களை உற்​சாகப்​படுத்​தினர். அதை நினைத்​தால் இப்​போதும்​ உடல்​ சிலிர்க்​கிறது.
இவ்​வாறு அவர்​ கூறி​னார்​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here