தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழப்பு

0
197

புகையிரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தின் நடந்து சென்ற பெண் ஒருவர் புகையிரதம் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் இன்று பிற்பகல் 1: 30 மணியளவில் பாமஸ்டன் – கிரேட்வெஸ்றன் பகுதியில் புகையிரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தின் நடந்து சென்ற போது
புகையிரதம் மோதி தள்ளியுள்ளது.

இவரின் சடலத்தை உடன் ரயிலில் ஏற்றிக்கொண்டு தலவாக்கலை புகையிரத நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு ரயில் சென்றுள்ளது . குறித்த புகையிரத நிலைய அதிகாரிகள் 1990 ஆம்புலன்ஸ் மூலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புகையிரதத்தின் மோதி உயிரிழந்தவர் நானுஓயா உடரதல்ல தோட்டத்தை சேர்ந்த சண்முகம் சந்திரமதி (வயது-40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் இடம்பெற உள்ளது.

 

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here