தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில்

0
172

தந்தை தலையிலும் கால்களிலும் பிரம்பால் தாக்கியதில் படுகாயமடைந்த மகன் இன்று (04) காலை மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அரவ திக்யாய குருபங்வல பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாடசாலை முடிந்த உடனேயே, தனது தோட்டத்திற்கு அருகில் உள்ள காடுகளை அகற்றுமாறு தந்தை உத்தரவிட்டார், அதைச் செய்யாததால் கோபமடைந்த தந்தை மாணவனைத் தாக்கினார்.

வீட்டில் இருந்த பிரம்பை எடுத்து வந்து மகன் மீது தலை மற்றும் கால்களில் பலமுறை அடித்ததாகவும், அதனை தடுக்க முயன்ற போது தன்னையும் தாக்கியதாகவும் மாணவனின் தாய் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் தந்தை பிள்ளையை பாடசாலை முடிந்தவுடன் உடனடியாக காட்டை வெட்டுமாறு கட்டளையிட்டதாகவும், அவ்வாறு செய்யாத போது மகனை தாக்கியதாகவும் தாய் காவ்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை அரவ காவல் நிலையத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here