கொழும்பில் கைதுசெய்யபட்டுள்ள தம்முடைய சாரதிகள் குழுவில் உள்ள சாரதிகள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னன் தெரிவிப்புமாதிவெலயில் உள்ள நாடாளு மன்ற உறுப்பினர்களின் தங்குமிட கட்டிட தொகுதியில் உள்ள நடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மதுபோதையில் பிரவேசித்த குற்றச்சாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சரின் சாரதி இன்று கைது செய்யபட்டமை தொடர்பில் தம்முடைய சாரதிகள் குழுவில் உள்ள சாரதிகள் தொடர்பாக உரிய சட்டநடவடிக்கை எடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னன் தெரிவித்துள்ளார்.
முறையற்ற ஊழல் தொடர்பில் மிரிஹான பொலிஸாரினால் 29.07.2018 ஞாயிற்றுகிழமை காலை கைது செய்யபட்டுள்ளதாக காவல் பிரிவு ஊடகதுறை தெரிவித்துள்ளது.
இந் நிலையில் கல்வி இராங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டுள்ள தமது சாரதி தொடர்பான விசாரனையில் தம்முடைய எந்த தலையீடும் இருக்காது எனவும் சம்பவம் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்
கைது செய்யபட்ட நபர் தமது குழுவில் உள்ள சாரதி எனவும் அவர் தம்முடைய தனிப்பட்ட சாரதி இல்லையெனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொள்கின்ற நடவடிக்கைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவூம் அவர் தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)