தனது மகளை துண்டுகளாக வெட்டி சமைத்த கொடூர தாய்!

0
153

மகள் அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டு வந்ததாகவும் கடந்த 8ம் திகதி போதையில் மகளை கத்தியால் குத்தி கொன்றதாகவும் ஒப்புகொண்டார்.
பிரேசில் நாட்டில் தாயொருவர் தனது மகளை கொடூரமாக கொலை செய்து துண்டுகளாக வெட்டி சமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் – சௌபவுலோ பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ரூத் என்ற பெண்ணே இவ்வாறு தனது 9 வயது மகளை கொலை செய்துள்ளார்.

குறித்த தாய், தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில், தனது ஆண் நண்பருடன் சௌபவுலோ நகரில் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.

இதனால் அவரது மகள் தந்தை வேண்டும் என கோரி தினமும் சண்டையிட்டு வந்ததாகவும் குறித்த தாய் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.மேலும், மகள் அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டு வந்ததாகவும் கடந்த 8ம் திகதி போதையில் மகளை கத்தியால் குத்தி கொன்றதாகவும் ஒப்புகொண்டார்.

சடலத்தை அப்புறப்படுத்துவது எப்பிடி என இணையத்தில் தேடிய புளோரியானோ, உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சமைத்து அவற்றை அப்புறப்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்தவாரம் வீட்டிற்கு வந்த ஆண் நட்பரின் தாயார் பிரிட்ஜில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்ததை கண்டு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து குறித்த தாய் கைது செய்யப்பட்டதுடன், சிறுமியின் உடற்பாகங்கள் மீட்க்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here