தனது மாதாந்த சம்பளத்தை விசேட தேவையுடையோருக்கும் வரிய மக்கள் நலன் சார்ந்த வியங்களுக்கும் வழங்கபோவதாக நோர்வூட் பிரதேச சபையின் புதிய தலைவர் கே.கே.ரவி தெரிவித்தார்
நோர்வூட் பிரதேச சபையின் ஜூன் மாதத்திற்கான மாதாந்த பொதுக்கூட்டம் 25.06.2018 காலை 10 மணிக்கு ஆரம்பமாவதற்கு முன்னர் சபைக்காரியலம்முன்றலில் தேசிய கொடியை ஏற்றி சம்பிரதாய பூர்வமாக தனது கடமைகளை பெருப்பேற்றுக்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்
அத்தோடு தனது முதல் மாதச்சம்பளத்தில் மோரா தோட்டத்தை சேர்ந்த விசேடதேவையுடைய ஒருவருக்கு சக்கரநாட்களியொன்றை சபை உறுப்பினர்கள் மத்தியில் கையளித்தார்.
இங்கு தொடர்ந்து அவர் உறையாற்றுகையில் நோர்வூட் பிரதேச சபையின் தலைவராக பெருப்பேற்ற நாள் முதல் எனது கடமைகளை கட்சி பேதமின்றி சகலருக்கும் சமமான வகையில் சேவைகளை செய்யவுள்ளேன் அத்தோடு நோர்வூட் பிரதேச சபையூடாக மக்களின் நலன் சார்ந்த அவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையோடு ஒத்துழைப்பை நல்க வேண்டும் மேலும் பிரதேச சபையை ஒரு நிருவனமாகவே கருதுகின்றேன்
தொடர்ந்து எனது மாதாந்த சம்பளத்தை வறிய மகள்ளின் நலன் சார் வியங்களுக்கு வழங்குவேன் எனவும் தெரிவித்தர்
மேலும் கடந்த மார்ச் மாதம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நோர்வூட் பிரதேச சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புளியாவத்தை வட்டார உறுப்பினர் தட்சணாமூர்த்தி கிசோக்குமார் தெரிவாகியதுடன் உப தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வனராஜா வட்டார உறுப்பினர் சிவசாமி தெரிவு செய்யப்பட்டிருந்தார் இந் நிலையில் இரண்டவது சபையமர்வின் பின்னர் உபதலைவரான சிவசாமி இராஜினாமா செய்த நிலையில் நோர்வூட் பிரதேச சபையின் உபதலைவராக தலைவாராக கடமைபுரிந்த தங்கராஜ் கிசோக்குமார் உபதவராகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பட்டியல் உறுப்பினரா கே.கே.ரவி சபையின் தலைவராகவும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.