தனமல்வில – வெல்லவாய வீதி விபத்தில் ஒருவர் பலி!

0
75
தனமல்வில – வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை நடந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி உட்பட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
அவிசாவளை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிக்காக சென்று மீண்டும் புத்தளவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த குழுவே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

வேனின் சாரதிக்கு 18 வயது என்பதுடன், இறந்தவர் தம்புள்ளையைச் சேர்ந்த 56 வயதானவர் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here