தனித்து களமிறங்கும் யானை – மொட்டுக்கு பேரிடி

0
210

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமது கட்சி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சில உள்ளூராட்சி சபைகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம், அவ்வாறு இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடும் எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில், தற்போது வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக பொதுச் செயலாளர் தெரிவித்தார். திறமையான புதியவர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்படும் என்றும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here